முல்லைத்தீவில் உள்ள தமிழர்களால் குருந்தூர் மலை என்று அழைக்கப்படும் ‘குருந்தி விகாரை’ ஒரு கோவில் எனும் அனைத்துக் கூற்றுகளையும் தொல்பொருள் நிபுணர் எல்லாவல மேதானந்த தேரர் நிராகரித்துள்ளார்.மாறாக அந்த இடம் உண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு ஆலயம் என வலியுறுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் (18.06.2023) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.100 வீத பௌத்த ஆலயம்
மேலும் அவர் கூறியுள்ளதாவது, குருந்தி விகாரை அமைந்துள்ள இடத்தில் ஒரு காலத்தில் கோவில் இருந்ததாக அண்மைக்காலமாக கூறப்படுகின்ற போதிலும் அதில் எவ்வித உண்மையும் இல்லை.இது 100 வீதம் பௌத்த ஆலயம் என்பதை அகழ்வாராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.
இருந்த போதிலும், சிலர் பொய்யான கூற்றுகளுக்கு ஆட்பட்டு அந்தப் பகுதி மக்களிடையே நிலத்தை பகிர்ந்தளிக்க முயல்வது தவறு.
எனவே, தமிழ் அரசியல்வாதிகள் நிலைமையின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, இது தொடர்பில் அனைவருக்கும் நியாயமான உடன்பாட்டை எட்டுமாறும் பிக்கு வலியுறுத்தினார்.
வரலாற்று சிறப்புமிக்க குருந்தி விகாரையை பல சர்ச்சைகள் சூழ்ந்துள்ள பின்னணியில் எல்லாவல மேதானந்த தேரரின் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விகாரைக்கு சொந்தமான காணிக்குள் தமிழர்களை குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, குருந்தூர்மலை விகாரைக்கு சொந்தமான காணி அரச காணி எனவும், அதனை எவருக்கும் பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானம் எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளதாக எல்லாவல மேதானந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.