நந்திக்கடலில் வீழ்ந்த இளைஞன் உயிரிழப்பு.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்குட்பட்ட நந்திக்கடல் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (01) காலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மந்துவில் பகுதியினை சேர்ந்த 33 வயதுடைய தர்மராசா நிசாந்தன் என்ற இளைஞன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் நந்திக்கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.

கோயிலுக்கு முன்னால் உள்ள நந்திக்கடலில் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரின் உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

Related news