முல்லைதீவு மாவட்டத்தில் கடந்த 2004 மார்கழி 26 அன்று இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தால் காவு கொள்ளப்பட்டவர்கள் நினைவாக முல்லைத்தீவில் கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழக மைதானத்திலே விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலே நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக இன்றையதினம் இடம்பெற்று இருந்தது.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின் தாக்கத்தினால் அதிகளவான மக்கள் உயிரிழந்திருந்தனர்.இவர்களை நினைகூரும் வகையில் கள்ளப்பாடு கிராமத்தின் உதயம் விளையாட்டுக்கழக மைதானத்திலே விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலே குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
சுனாமி பேரலையில் தமது உறவுகளை தொலைத்த உறவினர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து உறவுகளுக்கான சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.