முல்லைத்தீவில் சிறப்பாக இடம்பெற்ற பட்ட திருவிழா!! இளஞனை விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார்.

முல்லைத்தீவு கடற்கரையில் படத்திருவிழா நேற்றையதினம் மாலை சிறப்புற இடம் பெற்றிருந்தது.

வல்வெட்டித்துறையில் வருடாவருடம் பட்டத்திருவிழா மேற்கொள்ளுபவர்களால் முல்லைத்தீவு கடற்கரையில் நேற்றையதினம் (28.01.2024) பட்டத்திருவிழா ஆரம்பிக்கும் நிகழ்வாக இடம்பெற்றிருந்தது. அதில் வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்தனர்.

குறித்த பட்ட திருவிழாவில் முல்லைத்தீவினை சேர்ந்த இளைஞர் ஒருவர் பட்டத்தில் தமிழீழ வரைபடம், கார்த்திகை பூ படம் அமைப்பில் உருவாக்கப்பட்ட பட்டத்தினை ஏற்றியுள்ளார். இதனை அவதானித்தாக கூறி முல்லைத்தீவு பொலிஸார் அவ் இடத்திற்கு சென்று குறித்த இளைஞனை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Latest news

Related news