தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு. அவதானமாக இருக்க அனர்த்த முகாமைத்துவத்தினர் அறிவுறுத்தல்.

தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, தண்ணிமுறிப்பு குளமானது வான்பாயக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருக்கின்ற நிலையில் தற்போது 20.10″ அடி வரை நீர் மட்டம் உயர்ந்த நிலையிலே இவ் அறிவித்தலை வெளியிட்டுள்ளனர்.
தற்போது பெய்யும் கனமழை காரணமாக தண்ணிமுறிப்பு குளம் வான்பாயக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது. எனவே குளத்தின் கீழ்பகுதியில் இருக்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் இன்று (14) மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் குளங்களுள் நான்காவது பெரிய குளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news