பெண்களின் உள்ளூர் உற்பதியை முன்னேற்ற சுயதொழில் கண்காட்சி (Photos)

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கோடு 2025 ஆம் ஆண்டுக்கான என்.எல்.எப் பஷன் கடைத்தாெகுதி திறந்து வைக்கப்பட்டதுடன் சுயதொழில் விற்பனையும் , பொங்கல் நிகழ்வும் நேற்றையதினம் (23.01.2025) சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

தற்காலத்தில் பெண்களின் கைத்தொழிலினை மேம்படுத்தி பெண்களை வருமானமீட்டும் வகையில் முன் உதாரணமாக புதியவாழ்வு நிறுவனத்தினரின் ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் நிகழ்வும், பெண்களின் கைவினைப்பொருள் விற்பனையும், கைவினை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான என்.எல்.எப் பஷன் (NLF fashion) கடைத்தொகுதி ஒன்றும் தெல்லிப்பளை மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் வடக்கு வீதியில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

புதியவாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான செல்வி துரைச்சாமி திலகவதி தலைமையில் விருந்தினர்களுடன் கந்தசாமி ஆலய தரிசனத்துடன் ஆரம்பமாகி ,விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவித்து, பொங்கல் நிகழ்வு இடம்பெற்று, என் எல்.எப்.பஷன் கடைத்தொகுதி திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் சுயதொழில் முயற்சியாளர்களின் பொருட்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டபின்படிப்பு பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி, புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்த கல்லூரி அதிபர் சி.திரிகரன், வலிகாமம் உதவி பிரதேச செயலாளர், புதியவாழ்வு நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் விஜயலாதன், நிறுவன பிரதிநிதிகள், யாழ்வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் 89 ஆம் அணி புலம்பெயர் பழையமாணவிகள், சுயதொழில் முயற்சியாளர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

Latest news

Related news