லண்டன் வரை தேடி வந்து ஒருதலைக்காதலை மாஸ்கை பயன்படுத்தி ஆசிய இளைஞரின் கொடுஞ்செயல்

ஒருதலை காதல் காரணமாக லண்டனில் பல்கலைக்கழக மாணவியை இளைஞர் ஒருவர் வெறும் மாஸ்க் பயன்படுத்தி கொலை செய்து சடலத்தை சூட்கேசில் திணித்து மறைவு செய்த சம்பவம் விசாரணைக்கு வந்துள்ளது.

சடலம் ஒரு சூட்கேசில் திணிக்கப்பட்டு

பாகிஸ்தான் நாட்டவரான ஹினா பஷீர் கோவென்ட்ரி பல்கலைக்கழகத்தின் லண்டன் வளாகத்தில் படித்து வந்தார். 2022 ஜூலை மாதம் தமது நண்பரை சந்திக்க சென்ற அவர் அதன் பின்னர் மாயமாகியுள்ளார்.

இந்த நிலையில் 21 வயதேயான ஹினா பஷீரின் சடலம் கிழக்கு லண்டனில் ஒரு சூட்கேசில் திணிக்கப்பட்டு மறைவு செய்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அவரது காதலன் என கூறப்பட்ட முஹம்மது அர்ஸ்லான்(27) கைது செய்யப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது.

ஹினாவுடன் சிறு வயது முதலே பழகி வந்த அர்ஸ்லான் அவர் மீது ஆசை கொண்டுள்ளான். 2021 நவம்பர் மாதம் ஹினா லண்டனுக்கு படிப்புக்காக குடிபெயர அர்ஸ்லானும் அவரை தொடர்ந்து லண்டன் வந்துள்ளார்.

2022 ஜூலை 11ம் திகதி அர்ஸ்லான் வீட்டுக்கு சென்ற ஹினா அதன் பின்னர் உயிருடன் திரும்பவில்லை என்றே நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ஸ்லான், கூடவே பெரிய சூட்கேஸ் ஒன்றையும் எடுத்து சென்றுள்ளார்.

மாஸ்க் ஒன்றை வாய்க்குள் திணித்து

பின்னர் டாக்சி ஒன்றில் அந்த சூட்கேஸ் உடன் இவர் பணியாற்றும் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கே மறைவான பகுதியில் பெட்டியை கைவிட்டுள்ளார். ஆனால் ஹினா தொடர்பில் கவலை கொண்ட அவரது தந்தை மூன்று நாட்களுக்கு பின்னர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, ஜூலை 17ம் திகதி சூட்கேஸில் அவரது உடலை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இதில் மாஸ்க் ஒன்றை வாய்க்குள் திணித்து கொலை நடந்துள்ளது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. மட்டுமின்றி அர்ஸ்லான் வீட்டு படுக்கையில் ஹினாவின் ரத்தம் மற்றும் கொலைக்கு அர்ஸ்லான் பயன்படுத்திய மாஸ்க்கும் கண்டெடுக்கப்பட்டது.

கண்காணிப்பு கமெரா பதிவுகள் மற்றும் டி.என்.ஏ சோதனையிலும் அர்ஸ்லான் இந்த கொலையில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. ஹினாவை திருமணம் செய்துகொள்ள அர்ஸ்லான் விரும்பினாலும், ஹினா மறுத்து வந்ததாகவே கூறப்படுகிறது.

Latest news

Related news