விஜய் டீவி சிவாங்கி ஃபைனல் போனது எப்படி? CWC சர்ச்சைக்கு வெங்கடேஷ் பட் கொடுத்த பதில்

விஜய் டிவி ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது ஒளிபரப்பாகி வரும் 4ம் சீசன் பல்வேறு அதிர்ச்சிகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. முக்கியமாக மணிமேகலை அந்த ஷோவில் இருந்து திடீரென வெளியேறியது, KPY பாலா ஷோவுக்கு வராமலே போனது என ரசிகர்களுக்கு பல விஷயங்கள் அதிர்ச்சி கொடுத்தது.

தற்போது CWC 4 ஷோ இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.

சிவாங்கி

தற்போது சிவாங்கி தான் முதல் ஆளாக பைனலுக்கு தேர்வு ஆகி இருக்கிறார். சமைக்கவே தெரியாத சிவாங்கி எப்படி பைனலுக்கு சென்றார் என ஒரு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் தற்போது விஜய் டிவியை விளாசி வருகின்றனர்.

இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கும் நடிகர் வெங்கடேஷ் பட், “அப்பா – மகள் போல சிவாங்கி உடன் பழகினாலும் அது போட்டிக்கு வெளியே தான். போட்டியில் அவர்கள் சமைப்பதை வைத்து தான் தீர்ப்பு வழங்கப்படுகிறது” என தெரிவித்து இருக்கிறார்.

Latest news

Related news