மத்திய மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள விரிசல்கள்! கம்பளையில் பதிவான நிலநடுக்கம்

கம்பளை பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்காரணமாக கொத்மலை நீர்த்தேக்கம் மற்றும் ஏனைய மலையக நீர்த்தேக்கங்கள் தொடர்பில் அச்சம்கொள்ள தேவையில்லை என பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர்  அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கம்பளையில் நேற்றிரவு நிலநடுக்கம் பதிவாகியிருந்த நிலையில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல, போன்ற நீர்த்தேக்கங்கள் நில அதிர்வுகளை தாங்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் 2 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட சிறிய நிலநடுக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய மலைப்பகுதியில் பூமியில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், நீர்த்தேக்கங்களில் நீர் நிரப்பப்பட்டு நீரை வெளியேற்றும் போது, ​​இந்த விரிசல்கள் இடம்பெயர்வது அல்லது சுருங்குவது சிறிய நிலநடுக்கங்களை ஏற்படுத்தும் என்றும் பேராசிரியர் வலியுறுத்தியுள்ளார்.

Latest news

Related news