முல்லைத்தீவில் இளைஞனின் விபரீத முடிவு

முல்லைத்தீவு பிரதேசத்தில் கடனை செலுத்த முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு – குமுளமுனை பகுதியில் வசிக்கும் சதாசிவம் முரளிதரன் என்ற 28 வயது பட்டதாரி இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பதற்கு முன்னர் கடன் பிரச்சனையால் உயிரை மாய்த்துக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

குறித்த இளைஞன் இலங்கையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2022 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Latest news

Related news