மின்சாரக் கட்டணத்துக்கு மேலும் உறுதியான நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அடுத்த வருடம் ஜனவரி மாதம் விசேட மின் கட்டணச் சலுகையை மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாட்டின் சிரமங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன், மின்சாரக் கட்டணம் அதிகம், எரிபொருளின் விலை அதிகம், ஜனவரி 1ஆம் திகதி மின்சாரத் திருத்தத்திற்கான பிரேரணையை நவம்பரில் கொடுங்கள் என்று கூறுகின்றேன்.இப்போது ஜூலையில் திருத்தத்தில் இருந்து சில தொகை குறைக்கப்பட்டுள்ளது
குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தும் 0 – 30, 30 – 60, 60 – 90 யூனிட்களுக்கு 27% மின் கட்டணத்தை குறைக்க முன்மொழிந்துள்ளோம்.
மின்சாரக் கட்டணத்துக்கு மேலும் உறுதியான நிவாரணம் அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் ஜனவரி மாதத்தில் செயற்படுத்தப்படும்” – என்றார்