மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படும் மின் கட்டண திருத்தத்தை விட, ஜனவரியில் மேற்கொள்ளப்படும் கட்டண திருத்தத்தில்அதிக சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டண திருத்தம்
இதேவேளை ஜூலையில் மேற்கொள்ளப்படும் மின் கட்டண திருத்தத்தில், மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துகின்றவர்களுக்கு 27 வீதம் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் நவம்பரில் கையளிக்கப்படும் என்றும், இது தொடர்பான உறுதிப்படுத்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, ஜூலை மாத நிவாரணத்தை விட ஜனவரி மாதம் அதிக நிவாரணம் வழங்குவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.