வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தில் ஐஸ் கட்டிகளை மட்டுமே வைத்து மசாஜ் செய்யலாம்.
அடிக்கடி முகத்துக்கு ஐஸ்கட்டியால் மசாஜ் செய்யுங்கள்! வயதே ஆகாது!
வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தில் ஐஸ் கட்டிகளை மட்டுமே வைத்து மசாஜ் செய்யலாம்.
முகத்தை அழகுப்படுத்த விலைக் கொடுத்து வாங்கும் அழகு சாதன பொருட்களை விட வீட்டில் கிடைக்கும் ஐஸ் கட்டி பல அதிசயங்களை செய்யக் கூடியது.
இது பல பேருக்குத் தெரியாத அழகின் ரகசியம்.
ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்தால், முகமானது பார்க்க பிரகாசமாக, முகச்சுருக்கம் இல்லாமல் இளமையாக இருப்பது போல் இருக்கும்.
மேலும், வீட்டில் பேசியல் செய்த பிறகு கூட ஐஸ் கட்டிகளை வைத்து எந்த நேரத்திலும் மசாஜ் செய்யலாம்.
இனி எப்படி மசாஜ் செய்வது என்று பார்க்கலாம்.
முதலாவது குறிப்பு
வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தில் ஐஸ் கட்டிகளை மட்டுமே வைத்து மசாஜ் செய்யலாம். இதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து விடும்.
இரண்டாவது குறிப்பு
முதலில் முகத்திற்கு ஏற்ற பேஸ் பேக்குடன் ஐஸ் கட்டிகளை பயன்படுத்துங்கள்.
பேஸ் பேக்கானது இயற்கையானதாக இருக்க வேண்டும்.
வேண்டுமென்றால் கடலை மாவுடன், முட்டையின் மஞ்சள் கரு, ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு போட்டு கலக்கி முகத்தில் பயன்படுத்தலாம்.
ஐந்து நிமிடத்திற்குப் பிறகு ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யவும்.
மசாஜ் செய்யும் போது நெற்றியில் இருந்து தொடங்க வேண்டும். பின் மெதுவாக கண்ணுக்கு அருகில் செய்ய வேண்டும்.பின் அதனை ஈரமான துணியால் துடைத்து எடுத்து விடவும்.
இப்படி செய்தால் முகமானது மென்மையாக இருக்கும்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
முக்கிய குறிப்பு
மசாஜ் செய்தால் குறைந்தது 2-4 நிமிடமாவது செய்து, பின் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். ஐஸ் கட்டி போட்டு முகம் எரிவது போல் இருந்தாலும், சிவப்பு நிறத்தில் மாறினாலும், ஐஸ் கட்டி போடுவதை நிறுத்தவும்.
ஐஸ் கட்டிகள் மிகவும் குளிர்ச்சியானவை, அதை போட்டு முகத்தில் எரிச்சலோ அல்லது முகம் சிவப்பு நிறத்தில் மாறினாலோ 30-45 நிமிடத்திற்கு மேல் தொடர்ந்தால் அது அலர்ஜி என்று அர்த்தம். பின் அதனை செய்ய வேண்டாம்.
ஐஸ் கட்டி பயன்படுத்த கஷ்டப்படுபவர்கள் ஐஸ் பேக் அல்லது ஒரு சுத்தமான துணியை முகத்தில் போர்த்தி அதன் மேல் ஐஸ் கட்டியை வைத்து துடைக்கவும். துணியானது சுத்தமாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.

நன்மைகள்
ஐஸ் கட்டியை முகத்தில் தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகமாகி முகம் பளிச்சென்று ஆகிவிடும்.
ஐஸ் கட்டியை தேய்ப்பதால் இரத்த குழாய்கள் முதலில் சுருங்கி இரத்த ஓட்டம் குறையும். பின்னர் இதை ஈடு செய்ய நம்முடைய உடல் அதிகமாக இரத்த ஓட்டத்தை முகத்தில் ஏற்படுத்தும். இது முகத்தை பொலிவாக மற்றும் உயிர்ப்பாக மாற்றும்.
ஐஸ் கட்டியை முகத்தில் பயன்படுத்துவதால் சருமத்தில் உற்பத்தியாகும் எண்ணெய் பசை குறையும். அதனால் முகப்பருவும் மறையும்.
முகப்பருவினால் ஏற்படும் வலி மற்றும் வீக்கங்களையும் ஐஸ் கட்டி குறைக்கும்.
கண்கள் சோர்ந்து காணப்படும் போது முக அழகே கெட்டு விடும். இதை போக்க கண்ணின் விழி ஓரத்திலிருந்து ஆரம்பித்து மேற்புறம் கண் இமை வரை ஐஸ் கட்டி கொண்டு வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும். இது வீக்கங்களையும் குறைக்கும்.
ஐஸ் கட்டி கொண்டு முகத்தில் தேய்ப்பதால் ஏற்கனவே உள்ள முக சுருக்கம் மறையும் மேலும் புதிதாக சுருக்கங்களும் விழாது.
ஐஸ் கட்டிகளை உதட்டில் பயன்படுத்தும் போது உதடுகள் மென்மையாக மாறும். அதுமட்டுமல்லாமல் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.