புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் டிப்பர் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட வேளை வாகனமும் அதன் சாரதியினையும் புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் இருந்து டிப்பர் ஒன்றில் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை கடத்தப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.கே.ஹெரத் தலைமையிலான பொலிஸாரால் கடத்தல் முறியடிக்கப்பட்டிருந்தது.
வள்ளிபுனம் பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி சென்ற குறித்த டிப்பர் வாகனம் தேராவில் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது இன்று (23.12.2023) காலை வழிமறித்து சோதனை செய்த வேளை டிப்பருக்குள் பாலை மரக்குற்றிகளை போட்டு அதன்மேல் சல்லிக்கல்லுகளை போட்டு மறைத்து வெளி மாவட்டத்திற்கு கொண்டு செல்லமுற்பட்ட போது இவை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளன.
சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான பாலை மரக்குற்றிகள் துண்டங்களாக அறுக்கப்பட்டு கடத்தலில் ஈடுபட்டவேளை சாரதியினையும் வாகனத்தினையும் பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
கல்லாறு தர்மபுரத்தினை சேர்ந்த வாகன சாரதியே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் மீட்கப்பட்ட பாலைமரக்குற்றிகள் மற்றும் டிப்பர் வாகனம் என்பவற்றையும் சந்தேக நபரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்.