புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சட்டவிரோத போதை உற்பத்தி , விற்பனை, பாவனையை முற்றாக ஒழிக்க மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
தற்காலத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, போதைப்பொருள் பாவனையால் இளம் சமுதாயத்தினர் தம் எதிர் காலத்தையை இழந்து விடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கர்ணண் குடியிருப்பு பகுதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை ஒழிக்க குறித்த பகுதி மக்களுக்கும் , புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் உள்ளிடட்ட குழுவினருக்கும் இடையில் நேற்றையதினம் (18.01.2024) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் போதை ஒழிப்பது தொடர்பாகவும், அதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது. இக்கலந்துரையாடலின் போது புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் எந் நேரத்திலும் போதை ஒழிப்பு தொடர்பான விடயங்களை அறியப்படுத்துமாறும், எந்நேரமும் தாம் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும், போதைப்பாெருள் பாவனையை ஒழிக்க தம்மால் முடிந்த உதவிகளை செய்வதாகவும் கூறியிருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் கர்ணண் குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கத்தினர், இளைஞர்கள், பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.