முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது
குறிப்பாக குறித்த கிராமத்தின் அனைத்து பகுதிகளும் நீரில் மூழ்கி அனைத்து குடும்பங்களும் பாதிப்பை எதிர்நோக்கி இருந்த நிலைமையில் அனைத்து குடும்பங்களும் பாடசாலையில் தஞ்சமடைந்திருந்தனர் இந்த பாதிப்பை எதிர்கொண்ட 303 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (30) இடம் பெற்றது
யுனிவெர்சல் பீஸ் பெடரேஷன் அமைப்பினால் தலா 4000 ரூபாய் பெறுமதியான உலருணவு பொதிகளே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான் அவர்களும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் குறித்த பகுதி கிராம அலுவலர் குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இவர்களுக்கான உணர்வு பொதிகளை வழங்கி வைத்தனர்.