முல்லைத்தீவு முள்ளியவளையில் 2024 ஆம் ஆண்டுக்கான சஜித்தன் நினைவுக்கிண்ண காற்பந்தாட்ட இறுதி போட்டி இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு முள்ளியவளை நாவற்காட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஐங்கரன் விளையாட்டு மைதானத்தில் 2024ஆம் ஆண்டுக்கான சஜித்தன் நினைவுக்கிண்ண இறுதி காற்பந்தாட்ட போட்டி இன்றைய தினம் (23.04.2024) மாலை இடம்பெற்றிருந்தது.
விளையாட்டு கழக தலைவர் க.நாதன் தலைமையில் ஆரம்பமான குறித்த இறுதி போட்டியில் முள்ளியவளை வித்தியா விளையாட்டுகழகம் மற்றும் சிலாவத்தை தியோநகர் அலைகள் விளையாட்டு கழகமும் போட்டியிட்டிருந்தது. இரண்டு அணிகளும் பலப்பரீட்சையில் ஈடுபட்டு இறுதியில் தியோநகர் அலை விளையாட்டு கழகம் 2: 1 எனும் விகிதத்தில் வெற்றியீட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைாசா ரவிகரன், கலைமகள் மகாவித்தியாலய அதிபர் ஜெயகாந், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் ஜெகதீசன் , கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எனஸ்டீன் , ஆன்மீக ஜோதி செல்வகுமார் , விளையாட்டுகழக உறுப்பினர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.