குமுழமுனை மகாவித்தியாலய பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டமும், நிர்வாகத்தெரிவும் 28.07.2024 அன்று நடைபெற இருக்கின்றதாக பழைய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத்தெரிவும் எதிர்வரும் 28.07.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிக்கு குமுழமுனை மகாவித்தியாலய வழிபாட்டு மண்டபத்தில் இடம்பெற இருக்கின்றது.
குறித்த கலந்துரையாடலில் தலைமையுரை, சென்ற பொதுக்கூட்ட அறிக்கை , கணக்கறிக்கை சமர்ப்பித்தல், நிர்வாகத்தெரிவு, வேறுவிடயங்கள், நன்றியுரை இடம்பெறும் எனவும், குறித்த ஒன்று கூடலுக்கு குமுழமுனை மகாவித்தியாலய பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு குமுழமுனை பழைய மாணவ சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.