முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையினரின் ஒழுங்குபடுத்தலில் 2025ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட மட்டத்திலான நீச்சல் போட்டி இன்றையதினம் (17.05.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

முன்னாள் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதனின் நிதி அனுசரணையோடு இன்று காலை குமுழமுனை கொட்டுகிணற்று பிள்ளையார் ஆலய நீச்சல் தடாகத்தில் மழைக்கு மத்தியில் போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. குறித்த போட்டியில் இளைஞர்களுக்கான 50மீற்றர், 100மீற்றர் நீச்சல் போட்டியும், அஞ்சல் ஓட்ட நீச்சலும் இடம்பெற்றிருந்தது. குறித்த போட்டியில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு , சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் இ.சகீதரசீலன், இலங்கை உயிர் காக்கும் நீச்சல் பயிற்றுவிப்பாளர் ஆர்.லஜீவன், முன்னாள் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதன் (கனடா) , புலம்பெயர் உறவு கந்தசாமி நுட்பராசா மற்றும் சமூக ஆர்வலர்கள், முல்லைத்தீவு மாவட்ட இளைஞர், யுவதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.




































