பேருந்துகள் ரயில் நிலையம் உள்பட பொது இடங்களில் பலர் இருந்தபடியே தூங்குவதை காணலாம்.ஆனால் இவ்வாறு தூங்குவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
உட்கார்ந்த இடத்திலேயே தூங்கும் பழக்கத்தை கொண்டவர்கள் மூட்டு வலியால் விரைவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் இரத்த உறைவு பிரச்சனைக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்புகளில் இரத்த ஓட்டம் உறைய தொடங்கிவிடும் என்பதால் கால்களில் வலி அல்லது வீக்கம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
நீண்ட நேரமாக அசைவு இல்லாமல் உட்கார்ந்திருப்பது ஒரே நிலையில் இருப்பது முதுகு வலி மற்றும் உடல் வலியை உண்டாக்கும் என்றும் இதனால் சில பக்க விளைவுகளும் ஏற்படுத்தக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
உட்கார்ந்த நிலையில் தூங்க விரும்பினால் சாய்வான நிலையில் இருக்கும் இடத்தை நாடுவது நல்லது என்றும் தவிர்க்க முடியாத நிலையில் மட்டும் உட்கார்ந்த நிலையில் தூங்கலாம் என்றும் உட்கார்ந்த நிலையிலே தூங்குவதை வழக்கமாக்கிக் கொண்டால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.