ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை இலியானா – கணவர் யார் தெரியுமா?

பிரபல நடிகை

தெலுங்கு திரைத்துறையில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்து பின் தமிழ் மற்றும் பாலிவுட் பக்கம் வந்தவர் தான் நடிகை இலியானா. தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.

இருப்பினும் இவர் விஜய்யுடன் இணைந்து நடித்த “நண்பன்” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாக இருக்கிறார்.

இலியானா தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்த போக்கிரி படம் வெற்றி அடைந்ததால் இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க தொடங்கினார்.

இலியானா

இவ்வாறு பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை இலியானா அண்மையில் அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், ஆனால் அவரின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என குறிப்பிடவில்லை.

அதன் பின் தன்னுடைய காதலனுடன் மோதிரம் அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார், அப்போதும் அவர் யார் என்பதை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் நடிகை இலியானா மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை ரகசிய திருமணம் செய்துள்ளதாகவும், விரைவில் அவரை அறிமுகம் செய்வார் என்ற தகவல் வந்துள்ளது.

Latest news

Related news