நச்சுத்தன்மை வாய்ந்த மதுபான உற்பத்தி மற்றும் பாவனை அதிகரிப்பினால் அரசாங்கத்தின் வரி வருமானம் குறைந்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அவ்வாறான இடங்களை தேடி மேற்கொள்ளப்படும் சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி நகருக்கு அருகில் நீண்டகாலமாக இயங்கி வந்த நச்சுத்தன்மை வாய்ந்த மதுபான ஆலையொன்று விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பின் போது ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருபது கோடா பீப்பாய்கள், ஐம்பது நச்சுத்தன்மை வாய்ந்த மதுபான போத்தல்கள், உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.