வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் மர்மமாக உயிரிழந்த தமிழ் பெண்! நீதிமன்ற சாட்சியத்தில் வெளியான தகவல்

கொழும்பு – வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் வீட்டுப்பணிப்பெண் ராஜகுமாரி பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் வீடு ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக தொழில்புரிந்த பதுளை தெமோதர பகுதியை சேர்ந்த 41 வயதான ராஜகுமாரி என்ற பெண் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென நோய்வாய்ப்பட்டதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் நேற்று(21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவ்வாறு சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா உள்ளிட்ட அதிகாரிகளின் வழிகாட்டலில் சாட்சியமளித்த மகேந்திரன் சுரேஸ் என்ற நபர், வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்குள் இராஜகுமாரி பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டதைக் கண்டதாகவும் சாட்சியம் வழங்கியுள்ளார்.

நேரில் கண்டவர் சாட்சியம்

சம்பவம் தொடர்பில் அவர் வழங்கிய சாட்சியம் பின்வருமாறு, ஒரு நாள் புறக்கோட்டை பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்து கைவிலங்கிட்டு வாகனத்தில் ஏற்றி பொரளை – கோட்டா வீதியில் உள்ள ராஜகுமாரி வேலை செய்த வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

 

 

Latest news

Related news