அஜித்தின் சூப்பர்ஹிட் படத்தில் விவேக் உடன் நடித்துள்ள மறைந்த நடிகர் மாரிமுத்து

நடிகர் மாரிமுத்து

தமிழ் சினிமா தொடர்ந்து பல கலைஞர்களை கலந்துகொண்டு இருக்கிறது. அப்படி யாராலும் ஈடுகட்ட முடியாத இழப்பு தான் நடிகர் மாரிமுத்து.

மாரடைப்பு காரணமாக மரணமடைந்த மாரிமுத்து திரையுலகில் சமீபத்தில் தான் பிரபலமாக துவங்கினார். எதிர்நீச்சல் சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்து. ஆனால், அதற்குள் இப்படியொரு சோகம் நடக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இன்று காலை 11 மணி அளவில் அவருக்கு இறுதிச்சடங்கு நடந்து உடல் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வாலி படத்தில் மாரிமுத்து

மாரிமுத்து பல இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அப்படி அவர் துணை இயக்குனராக பணிபுரிந்தவர்களில் ஒருவர் எஸ்.ஜே. சூர்யா. இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.

இந்நிலையில் எஸ்.ஜே. சூர்யா இயக்கிய வாலி படத்தில் விவேக் உடன் இணைந்து மாரிமுத்து நடித்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

 

 

Latest news

Related news