அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கம் நடத்திய சார் ஜான் டாபேட் சாம்பியன்ஷிப் 2023 போட்டியின் முதல் கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சேர்ந்து நடத்தபட்ட போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலை மகள் மகா வித்யாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியானது இம்மாதம் 04.10.2023 அன்று யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
இப் போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலை மகள் மகா வித்தியாலய மாணவர்களும் பங்குபற்றி வெற்றிபெற்று பாடசாலைக்கும் , வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
14வயது பெண்கள் பிரிவில் ர.டர்சியா 200m ஓட்ட போட்டியில் தங்க பதக்கமும் 100m இல் வெள்ளி பதக்கமும், ச. ரக்சனா நீளம் பாய்தல் போட்டியில் திறமை சான்றிதலும், 14வயது ஆண்கள் பிரிவில் ப. தர்சன் 100m போட்டியில் திறமை சான்றிதலும் 13வயது பெண்கள் பிரிவில் வி. நிஷாணி 100m போட்டியில் திறமை சான்றிதலையும் பெற்றுள்ளனர்.