முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுழற்சி முறை கடன் வழங்கி வைப்பு.

தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுழற்சி முறையிலான கடன் வழங்கும் திட்டம் ஒன்று இன்றையதினம் (08.10.2023) திலீபன் நிதியத்தினால் வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

லண்டனில் வசிக்கும் கந்தப்பிள்ளை திலீபன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட 15 பேர் கொண்ட குழுவினருக்கு

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் இ. ஜெகதீஸ்வரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திலீபன் நிதியத்தினால் 50,000 ரூபா சுழற்சி முறையிலான கடன் திட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதி வழங்கலில் முன்னாள் வட மகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்களான பீற்றர் இளஞ்செழியன், உதயகுமார், மரியஎனெஸ்ரின் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்திருந்தனர்.

Latest news

Related news