தென்னிந்திய நடிகர் விஜயகாந்த் காலமானார்

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக காலமானார்.

நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த மாதம் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கொரோனா தொற்று

அதன் போது, சில தினங்களில் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருந்தார். இதையடுத்து நேற்றைய தினம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார்.

அத்தோடு, அவரது உடல் நலம் குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாகவும் தே.மு.தி.க தலைமை கழகம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news