மன்னார் சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியானது!

மன்னாரில் சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியாகியுள்ளது.

மன்னாரில் 10 வயது சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்றையதினம் (16) சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இன்றையதினம் (17) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது.

இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்ட சிறுமியின் உடல் இன்றையதினம் காலை 10.30 மணியளவில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி செல்லத்துரை பிரணவன் குறித்த சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுமியின் சடலம் தற்போது அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news