2024 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வன்மை திறனாய்வுப்போட்டியினை முன்னிட்டு வீதியோட்ட நிகழ்வு இன்றைய தினம் இடம் பெற்றுள்ளது.
முல்லைத்தீவு அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வன்மை திறனாய்வுப்போட்டியினை முன்னிட்டு இன்றைய தினம் நடைபெற்ற வீதியோட்ட நிகழ்வானது பாடசாலை முதல்வர் திரு.முகுந்தன் தலைமையிலும் கனடா கந்தசாமி பத்மநாதன் அவர்களின் நிதியனுசரனையிலும் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் ஆண்களுக்கான போட்டியானது சிலாவத்தை சந்தியில் ஆரம்பமாகி பாடசாலைக்கு முன்பதாக நிறைவுபெறாறிருந்தது. அதனை முல்லை வலய உடற்கல்வி ஆலோசகர் திரு.கோரஸ் டிலான் அவர்கள் ஆரம்பித்து வைத்தார் அத்துடன் பெண்களுக்கான போட்டியானது உடுப்புக்குளம் சுவாமி தோட்டம் முன்பதாக ஆரம்பமாகி பாடசாலையில் நிறைவுற்றதுடன் இப்போட்டியினை பாடசாலையில் முன்னைநாள் முதல்வர் திரு.அல்பிரட் ஆரம்பித்து வைத்திருந்தார்.
ஆண்களுக்கான போட்டியில் முதலிடத்தினை விமலராசா வினுஸ்ரன் , இரண்டாமிடத்தினை பிரபாகரன் கர்ஜியன் , மூன்றாமிடத்தினை சிறிகாந் கௌசிகன் பெற்றிருந்தனர்.
பெண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தினை நிசங்கறூபன் ஜஸ்மின் ராகவி , இரண்டாமிடத்தினை லெனின் நெல்சன் வினோயினி , மூன்றாமிடத்தினை சூரியகுமார் விதுசா தங்கள் வசப்படுத்தி சாதனையினை நிலைநாட்டியிருந்தனர்.
குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர் ,முன்னைநாள் அதிபர் , ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து போட்டியில் பங்குகொண்ட வீர வீராங்கனைகளுக்கு உற்சாகத்தினையும் ஆதரவினையும் வழங்கியதுடன் போட்டிக்கான மருந்துவ உதவியினை அளம்பில் ஆதார வைத்தியசாலையின் மருத்துவக் குழுவினரும், களைப்புற்று வருகின்ற வீர வீராங்கனைளுக்கான தண்ணீர் வசதியினை விசேட ஏற்பாட்டில் உடுப்புக்குளம் அலையோசை விளையாட்டுக்கழகத்தினரும் மற்றும் அளம்பில் 24 வது சிங்க இராணுவ படை முகாமினரும் வழங்கியுதவியதும் குறிப்பிடதக்கது.