முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயத்தில் பாடசாலை இல்ல மெய்வன்மை திறனாய்வு போட்டியானது பாடசாலை முதல்வர் சோ.முகுந்தன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக அருட்பணி அ.ஜெ.அன்ரனி ஜெயஞ்சன் (விரிவுரையாளர்-புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவக்கல்லூரி மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) , சிறப்பு விருந்தினர்களாக த.ஸ்ரீபுஸ்பநாதன் (கோட்டக்கல்வி பணிப்பாளர்-கரைதுறைப்பற்று) வைத்தியர் க.சுதர்சன் (பிராந்திய சுகாதார பணிமனை முல்லைத்தீவு) மற்றும் கௌரவ விருந்தினர்களாக அருட்பணி.எமில் இராயேஸ்வரன் போல்(பங்குத்தந்தை ,அளம்பில்), K .டிலான் (ஆசிரிய ஆலோசகர் -உடற்கல்வி) மற்றும் அயற்பாடசாலை அதிபர்கள், பாடசாலை முன்னாள் அதிபர், அயற்பாடசாலை ஆசிரியர்கள்,கிராம உத்தியோகத்தர்கள், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
விருந்தினர்கள் அனைவரும் பாடசாலை வான்ட் வாத்திய இசைக்குழுவுடன் மாலையணிவித்து வரவேற்க்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து கொடிகள் ஏற்றப்பட்டதுடன் ஒலிம்பிக்தீபம் ஏற்றுதலுடன் அணிவகுப்பும் ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்ததுடன் வீதியோட்ட நிகழ்வில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகள் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் வெற்றிக்கிண்ணம், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டார்கள். அத்துடன் ஏனைய விளையாட்டுக்களில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கு வெற்றிக்கிண்ணங்கள் , சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ,கிராமத்தவர்கள் அயற்கிராம மக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.