கூழாமுறிப்பு பகுதியில் மாணவர்களுக்கான இலவச கற்றல் நிலையம் ஆரம்பித்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கோடு விஜயாலயன் அறக்கட்டளையினால் இன்றைய தினம் (10.03.2024) மாணவர்களுக்கான இலவச மாலை நேர கல்வி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

முள்ளியவளையை சேர்ந்த கனடா நாட்டின் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றி கடந்த 2022 ம் ஆண்டு கனடா நாட்டில் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியான விஜயாலயன் அவர்களின் நினைவாக அவர்களுடைய உறவுகளால் விஜயாலயன் அறக்கட்டளை எனும் பெயரிலே அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலே ஆரம்பிக்கப்பட்டுள்ள அமைப்பின் ஊடாக பல்வேறு இடங்களிலும் மாணவர்களுக்கான கற்றலுக்கான வசதிகள், கல்வி செயற்பாடுகளுக்கான கற்கை நிலையங்கள் என்பன ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றன

இதன் ஒரு அங்கமாக இன்று (10) கூழாமுறிப்பு பகுதியில் மாணவர்களுக்கான இலவச கற்றல் நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

விஜயாலயன் அறக்கட்டளையினுடைய முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் முன்னாள் கரைத்துறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஜெகதீஸ்வரன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கூழாமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் க.சபாஜிதன் அவர்கள் கல்வி நிலைய பெயர்ப்பலகையை திறந்து வைத்ததை தொடர்ந்து கூழாமுறிப்பு பங்குத்தந்தை ம.கான்ஸ்போவர் அவர்கள் கல்வி நிலையத்தை திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் கூழாமுறிப்பு பங்குத்தந்தை ம.கான்ஸ்போவர், கூழாமுறிப்பு கிராம அலுவலர் நா.இரஞ்சிதகுமார்,கூழாமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் க.சபாஜிதன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.மதன்ராஜ் விஜயாலயன் அறக்கட்டளையின் பார்த்தீபன் ,ஆசிரியர்கள், பெற்றோர்கள் , மாணவர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Latest news

Related news