புதுக்குடியிருப்பில் துவிச்சக்கரவண்டியுடன் ஒருவர் கைது.

புதுக்குடியிருப்பில் துவிச்சக்கரவண்டி திருட்டுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் சிவராத்திரி தினத்தன்று கந்தசாமி கோயிலுக்கு வந்த பக்தருடைய துவிச்சக்கரவண்டி பகல் 12 மணியளவில் திருடப்பட்டுள்ளது. இதனையடுத்து துவிச்சக்கரவண்டி உரிமையாளரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையில், பொலிஸ் சார்ஜன் குணவர்த்தன(70537), பொலிஸ் கொஸ்தாபல்களான ஜெயசூரிய (72485) மற்றும் பிரதீபன் (88509) ஆகிய குழுவினரின் தேடுதலின் போது இன்றையதினம் (11.03.2024) பிற்பகல் குறித்த நபர் துவிச்சக்கரவண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் கைவேலி சுண்ணாம்புசூளையடி வீதியில் வசிக்கும் 28 வயதுடையவர் என்பதுடன், இவர் ஏற்கனவே துவிச்சக்கரவண்டி திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையதோடு துவிச்சக்கர வண்டியும் இவரிடமிருந்து மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news