முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சிலர் புலனாய்வு பிரிவினரால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
நேற்றுமுன்தினம் (21.03.2024) முல்லைத்தீவிற்கு வருகை தந்த விஷேட புலனாய்வு பிரிவினர் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று தலைவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ள அதேநேரம் தலைவர் மற்றும் செயலாளரை விசாரணைக்காக விமான நிலையத்தில் அமைந்துள்ள புலனாய்வு அலுவலகத்திற்கு சமூகம் தருமாறு அழைப்பு கடிதத்தினை குறித்த தரப்பினரிடம் வழங்கி சென்றிருந்தனர்.
சென்ஜூட் விளையாட்டு கழகத்தினை சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவர் உதைபந்தாட்டத்தின் போது ஒழுங்கீனமாக நடந்ததற்காக முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் இரண்டு வருட தடை விதிக்கப்பட்டிருந்தது. குறித்த நபர் வெளிநாடு செல்வதற்காக சென்ற போது விமான நிலையத்தில் வைத்து பிடிபட்டிருந்தார்.
விசாரணையின் போது தனக்கான பயண அனுமதி பத்திரத்தினை செய்து தந்தது உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் மற்றும் ஒழுக்காற்று குழு தலைவர் என போலியாக தகவலை வழங்கியிருந்தார் என கூறப்படுகின்றது. அதன் அடிப்படையில் விமான நிலைய புலனாய்வு பிரிவினர் ஒழுக்காற்று குழு தலைவரை விசாரணைக்காக அழைத்து சென்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலே நேற்றையதினம் (22.03.2024) முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கோடு போடப்பட்ட வழக்கு எனவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்திற்கும், சென்ஜூட் விளையாட்டு கழகத்திற்கும் இடையில் பல்வேறு பிரச்சினை உள்ளது. ஏற்கனவே இரண்டு வழக்குகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் உள்ளது. அதன் அடிப்படையிலே போலியான வழக்கினை தாக்கல் செய்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் உதவியையும் பெற்றே குறித்த வழக்கினை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கானது நேற்றையதினம் நீதிமன்றில் எடுக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சட்டத்தரணி வி.எஸ்.எஸ்.தனஞ்சயன் ஆஜராகியிருந்தார். இதன் போது முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட0 சம்மேளனத்தினை சேர்ந்த நிர்வாகிகள் மூவருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என விவாதம் இடம்பெற்ற நிலையில் நீதிமன்றம் குறித்த நபரை பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு அடுத்த வழக்கு மே மாjதம் 28 ஆம் திகதிக்கும் தவணையிடப்பட்டுள்ளது.