துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு  தேவிபுரம் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (18.04.2024) பிற்பகல் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பு கைவேலி மயில்குஞ்சன் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய குடும்பஸ்தரே  இவ்வாறு காயமடைந்துள்ளார். குறித்த நபர் தமது வீட்டிலிருந்து தேவிபுரம் (ஆ) பகுதியிலுள்ள காட்டுப் பகுதியால் சென்ற போது விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படும் கட்டுத்துவக்கு வெடித்துள்ளது. இதனால் காயமடைந்த அவர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

Related news