நள்ளிரவில் யாழ் நோக்கி சென்ற பேருந்து விபத்து : மூவர் பலி

முல்லைத்தீவு மாங்குளத்தில் பயணித்த பேருந்து நேற்று இரவு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.

 

இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

 

நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறம் லொரி ஒன்று மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Latest news

Related news