முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஒன்பதாம் நாள் அகழ்வாய்வு செயற்பாடுகள் இன்று (13.07.2024) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 9ஆவது நாளான இன்று இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கபட்டுள்ளதுடன் சைனட்குப்பி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்டங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் போது இன்றுடன் 47 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் , முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தன.
நாளையதினம் விடுமுறை வழங்கப்பட்டு பத்தாம் நாள் அகழ்வாய்வு பணிகள் நாளை மறுதினம் (15.07.2024) மீண்டும் தொடர இருக்கின்றது.