மாங்குளத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை வழிமறித்து வீதியில் முறைகேடான முறையில் பரிசோதனை செய்து செய்தி சேகரிப்பதற்கு பொலிஸார் இடையூறு விளைவித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது ள.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து மாங்குளம் பகுதிக்கு செய்தி ஒன்றினை கேகரிப்பதற்காக இன்று (27.07.2014) காலை சென்ற சுயாதீன ஊடகவியலாளர் இராசையா உதயகுமாரினை ஒட்டுசுட்டானுக்கும் மாங்குளத்திற்கும் இடைப்பட்ட காட்டு பகுதியில் வைத்து வழிமறித்த பொலிஸார் சோதனை எனும் பெயரில் ஊடக பையிலிருந்த (Bag ) ஊடக சின்னங்களை (Logo) கீழே கொட்டி உதசீனப்படுத்தியிருக்கின்றார் கள்.
குறித்த ஊடகவியலாளர் பொலிஸார் வீதியில் வழிமறித்து சோதனையிடும் போது முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமைய ரீசேட் அணிந்திருந்ததுடன் ஊடக சின்னங்களை வைத்திருந்த போதும் பொலிஸார் அதனை கருத்தில் கொள்ளாது வீதியில் அவமதித்து சோதனையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.