முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலைக்கு மாணவன் ஒருவர் கஞ்சாவுடன் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (25.07.2024) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலைக்கு தரம் 8 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் தனது வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்லும் போது சிறு கஞ்சா பொதி ஒன்றினை பாடசாலைக்கு கொண்டு சென்றிருந்தான். இதனை அவதானித்த சக நண்பன் பாடசாலை அதிபரிடம் தகவலை தெரிவித்திருந்தான்.
இது தொடர்பாக குறித்த மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட பாடசாலை அதிபர் மாணவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அத்தோடு பொலிசாரால் எங்கிருந்து கஞ்சா கிடைக்கப்பெற்றது, வீட்டில் பாவனை இடம்பெறுகின்றதா என பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.