இளம் குடும்ப பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு. தீவிர விசாரணையில் பொலிஸார்

ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகர பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்று (29.07.2024) காலை இடம்பெற்றுள்ளது.

 

குறித்த பெண்ணை நேற்று இரவு தொடக்கம் காணவில்லையென வீட்டார் மற்றும் அயலவர்கள், கிராமத்தவர்கள் இணைந்து தேடுதல் நடத்தியும் எங்கும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இன்று (29.07.2024) காலை வீட்டு கிணற்றுக்குள் இருந்து சடலமாக இருப்பதனை அவதானித்த குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் .

 

குறித்த சம்பவத்தில் டெனிஸ்குமார் தெரினா என்ற 30 வயதுடைய இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

குறித்த பெண் திருமணமான பின்பு கணவருடைய வீட்டில் மாமன் மற்றும் மாமியுடன் வசித்து வந்ததாகவும் அவருக்கு 5 வயதுடைய ஒரு மகளும் உண்டு. குறித்த பெண்ணின் கணவர் புலம்பெயர் நாடு ஒன்றில் வசித்து வருவதாகவும் அவரின் துயரகரமான இழப்பு குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மிகுந்த மனவலி ஏற்படுத்தியுள்ளதுடன் இளம் பெண்ணின் மரணம் குறித்து சமூகத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

உடலம் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

Related news