காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக அதிகாரிகள் தமது உறுப்பினர்களை பல தடவைகள் அச்சுறுத்தியதாகவும் செயற்பாட்டை கண்டித்து எதிர்வரும் 20 ஆம் திகதி மாபெரும் போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி தெரிவித்தார்.
இன்றையதினம் (17.08.2014) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக அதிகாரிகள் தமது உறுப்பினர்களை பல தடவைகள் அச்சுறுத்தியதாக இங்கே குற்றம் சாட்டப்பட்டது அத்துடன் கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தில் ஓ எம் பி அலுவலகத்தினர் செயற்பட்ட விதம் தமக்கு எதிரானதாகவே அமைந்திருந்தது என்ற வகையிலும் இங்கு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஓ எம் பி அலுவலகத்தின் செயற்பாடுகள் தமக்கு எதிராகவும் அரசாங்கத்தை காப்பாற்றும் வகையிலும் அமைந்திருப்பதாகவும் கொக்கு தொடுவாய் புதைகுழி மூடப்பட்டமை தமக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் இந்த புதைகுழியைச் சூழ பல மனித எச்சங்கள் மேலும் இருக்கின்றன என்று தமக்கு தெரிய வருவதாகவும் இங்கு கருத்து வெளியிடப்பட்டது.
அத்துடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமக்கு எந்தவிதமான கரிசனையும் இல்லை என்ற வகையிலும் இது காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எந்தவிதமான தாக்கத்தையும் செலுத்தப் போவதில்லை என்றும் இச் செயற்பாடுகளை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 20 ஆம் திகதி கொக்குத்தொடுவாய் புதைகுழிக்கு முன்பாக மாபெரும் போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் மேலும் கருத்து தெரிவித்திருந்தார்.