முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில் ஏழு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் சித்தி பெற்று உள்ளதாக பாடசாலையின் அதிபர்
எஸ். விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில் 18 மாணவர்கள் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அவர்களில் 7 மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரம் படிக்க தகுதி பெற்றுள்ளனர்.
குறித்த கிராமம் போரினால் முழுவதுமாக பாதிக்கப்பட்டு இருந்தாலும் அக்கிராமத்தில் உள்ள மாணவர்கள் மிக சிரமத்தின் மத்தியிலும் கல்வி கற்று க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.