புதுக்குடியிருப்பு இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலய பாடசாலையில் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றி 21 மாணவர்கள் 63.6 வீதத்தில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் செல்லையா அமிர்தநாதன் தெரிவித்திருந்தார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலய பாடசாலையில் இவ்வருடம் 33 மாணவர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அதில் பி. நிவேதினி 9A, ரி.தேனருவி 9 A, எம். இன்பராஜ் 9A, டி.பிறின்சிக 8 A, B ,ஜெ.டெவ்றின் 7ABC ஆகிய 5 மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினையும் ஏனைய 16 மாணவர்களும் உயர்தரத்திற்கு தகுதி பெற்றும் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.