நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலே மக்களின் வலிகளை உணர்ந்தவர்களுக்கே வாக்களியுங்கள் என வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழர் மரபுரிமை கட்சியின் தலைவர் நேசராசா சங்கீதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் விட்ட தவறுகளால் இளைஞர்கள் பெரிய சாவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
யுத்தத்திற்கு பின் தமிழ் அரசியல்வாதிகளை நம்பி மக்கள் ஏமாந்தது ஏராளம்.
இனிவரும் காலங்களிலும் நாம் ஏமாறுவதற்கு தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் தொகுதியில் தமிழர் மரபுரிமை கட்சியில் சுயேட்சையாக மாட்டுவண்டி சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் நேசராசா சங்கீதன், மற்றும் வேட்பாளர்களான கார்த்திகேசு யோகராசா (முன்னாள் போராளி) , சிறீக்குமார் நிசாந்தி (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்) ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
மேலும் தெரிவிக்கையில்..