முல்லைத்தீவு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக விழிப்புணர்வு

சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு மூலம் இலங்கையில்  இயலாமையுடன் கூடிய நபர்களின்  சமூக உள்ளடக்கம் எனும் வேலைத்திட்டத்தினை ஆதரித்து பரிந்துரையாடல் எனும்  நிகழ்வு  நேற்றையதினம்  இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கும் இயலாமையுடன் கூடிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இயலாமை உள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடி  முன்மொழியப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பான  முன்வைப்பு இயக்கச்சி றீச்சா பண்ணையில்  காலை 10 மணிக்கு ஆரம்பமாகி மாலை வரை இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் இயலாமையுடன் கூடிய நபர்களின் பொருட்கள் சந்தைப்படுத்தல், உரிமைகள், கல்வி சுகாதாரம், வாழ்வாதாரம் , மருத்துவம்,  சம்பந்தமாக அவர்கள் அடைய வேண்டிய தேவை , அவற்றை பூர்த்தி செய்ய தேவையான விடயங்கள், செய்ய இயலாமையாக, சவாலாக  இருக்கும் விடயங்களை எவ்வாறு தீர்ப்பது  தொடர்பான  பரிந்துரையாடல் விழிப்புணர்வு செயற்பாடு  இடம்பெற்றிருந்தது.
குறித்த பரிந்துரையாடல் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் வாகீசன், சிறப்பு விருந்தினராக றீச்சா உரிமையாளர் பாஸ்கரன், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகங்களின் உதவி பிரதேச செயலாளர்கள், மற்றும் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள சமூகசேவை உத்தியோகத்தர்கள், மாற்று திறனாளிகள் அமைப்பின் வடமாகாண உபதலைவர், மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர், மாற்றுதிறனாளி அமைப்பினர், பொதுமக்கள், சைல்ட்பண்ட், ஒர்கான் நிறுவன ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என  பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்

Latest news

Related news