பாராளுமன்ற தேர்தலுக்காக சுவரொட்டி விளம்பரப்படுத்திய குடும்பஸ்தர்  மின்தாக்கி மரணம்

பாராளுமன்ற தேர்தலுக்காக சுவரொட்டி விளம்பரப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் மின்தாக்கி  மரணமடைந்த சம்பவம் ஒன்று நேற்றையதினம் இரவு  இடம்பெற்றுள்ளளது.

முல்லைத்தீவு  ஒட்டுசுட்டான் முத்து விநாயகபுரம் பகுதியில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணி  கட்சியில் போட்டியிடும்  இரு வேட்பாளர்களின் விளம்பர சுவரொட்டிகளை குடும்பஸ்தர் ஒருவர் குறித்த பகுதியில் சுவரொட்டிகளை நேற்றையதினம் (24.10.2024) இரவு 11.40 பகுதியில்   ஒட்டிய போது மின் ஒழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கியுள்ளது. இதனையடுத்து குறித்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த குடும்பஸ்தரின் உடலம்  தற்பொழுது முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் முத்து விநாயகபுரம் பகுதியை சேர்ந்த காசலிங்கம் தங்கதீபன் என்ற 45 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

Related news