முல்லைத்தீவு விசுவமடுவில் தமிழரசு கட்சி வேட்பாளர் டினேசனின் அலுவலகம் நேற்றையதினம் (25.10.2024) மாலை திறந்து வைத்து முல்லைத்தீவிலுள்ள அனைத்து இடங்களிலும் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
வன்னியில் தமிழரசுக் கட்சி வீட்டு சின்னம் 9 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் சட்டத்தரணியான டினேசன் தன்னுடைய அலுவலகத்தை திறந்து வைத்து பிரச்சார நடவடிக்கைகளை உடையார்கட்டு , விசுவமடு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் மேற்கொண்டிருந்தார்.
முல்லைத்தீவு மக்களுடைய, அமோக ஆதரவின் பேரிலே குறித்த கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.