யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் பரிதாப மரணம் 

முத்தையன்கட்டு பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் மரணமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளப்பகுதியின் கீழ் பகுதியில் இன்று (27.10.2024) மாலை 5.10 மணியளவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையை விரட்டி வந்துள்ளனர். அவர்களுடன் இணைந்து குறித்த இளைஞனும் யானையை விரட்டியுள்ளதாக தெரியவருகின்றது. இதன் போது குறித்த இளைஞனை யானை தாக்கியுள்ளது . அதனையடுத்து ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இளைஞன் மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த குறித்த இளைஞன் ஒட்டுசுட்டான் முத்துவிநாயகபுரம் பகுதியில் வசிக்கும் கேந்திரராசா பிரசாத் 21 வயதுடைய இளைஞனே குறித்த தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த இளைஞனின் சடலம் ஒட்டுசுட்டான் வைத்தியாசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

Latest news

Related news