முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெற்றுவரும் தபால் மூல வாக்களிப்பு

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள் தமது தபால் வாக்குகளை அளித்து வருகின்றனர்

இதேவேளை இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம், மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்கள் அடங்கலாக 11 வாக்களிப்பு நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு நிலையங்களில் இன்று தமது தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வன்னி தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவில் தேர்தல் தொகுதியில் 3947 பேர் இம்முறை தபாமூல வாக்களிப்புக்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news