மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 319 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.
இதேவேளை, ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை.
மேலும், மண்ணெண்ணெய்யின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.