புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்சியான மழை பெய்து வருவதனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்து வருகின்றது.இதனால் புதுக்குடியிருப்பு நகர் பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் , போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் அன்றாட வேலையில் ஈடுபடமுடியாது பாரிய சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.
அங்காங்கே வெள்ளநீர் அதிகரித்து காணப்படுவதனாலும், வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்தமையினாலும், தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள், புதுக்குடியிருப்பு மக்கள், வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வட கிழக்கில் தொடர்ச்சியாக இடியுடன் கூடிய காலநிலை, தொடர்ச்சியான மழைப்பொழிவு, வெள்ளஅபாய சிவப்பு எச்சரிக்கை விடுத்திருப்பதும் குறிப்பிடதக்கது.